30 பெண்களுக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய காம கொடூரன்....

சனி, 28 அக்டோபர் 2017 (14:45 IST)
தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் அதை பல பெண்களுக்கு பரப்பிய நபருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


 

 
இத்தாலி நாட்டை சேர்ந்தவர் வாலெண்டினோ டலுடோ (33). இவர் கடந்த 2006ம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட போது தனக்கு எச்.ஐ.வி தொற்று இருபப்தை தெரிந்து கொண்டார். 
 
ஆனால், அதன் பின்னரும் பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் அவர் உடலுறவு கொண்டுள்ளார்.  சமூகவலைத்தளங்கள் மூலம் பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துள்ளார். இதன் மூலம், 30க்கும் மேற்பட்ட பெண்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
 
இதனையடுத்து, டலுடோவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். இந்த வழக்கில் அவருக்கு 24 வருடங்கள் சிறை தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்