ஆணுறை விளம்பரத்தில் பிரபல நடிகை; வைரல் புகைப்படம்

வெள்ளி, 8 டிசம்பர் 2017 (11:59 IST)
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது  ராக்கி சாவந்த் வழக்கம்.
பாலிவுட்டில் அவ்வப்போது பிரச்சனையில் மாட்டி கொள்ளும் ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளது, அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்துயுள்ளது. இவ்வாறு நடிப்பது மக்களின் கவனத்தை ஈர்க்கப்பதற்காகவே என்று கூறப்படுகிறது.
 
விளம்பரத்தில் ராக்கி சாவந்த் ரோஸ் நிற உடையில் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். படுக்கையின் மீது அவர் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. விளம்பரத்தில் நடித்தது குறித்து ராக்கி சாவந்த் கூறுகையில், பீபாய்  ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளதை பெருமையாக நினைக்கிறேன். ஆணுறை குறித்து பல விளம்பரங்கள், ப்ரொமோஷன்கள் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளதால் மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்களா என்று தெரியவில்லை? ஆனால் நான் சமூகத்திற்கு செய்யும் நல்லதாக இதை நினைக்கிறேன் என்று ராக்கி  கூறியுள்ளார்.
 
பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது அல்லது ஏடாகூடமாக உடை அணிந்து வந்து விளம்பரம் தேடுவது ராக்கியின் வேலை. இதனால் பாலிவுட்டில் ராக்கி சாவந்துக்கு மோட்டார் மவுத் என்று பெயர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்