பிரபல கவர்ச்சி நடிகைக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி!

சனி, 3 ஜூன் 2017 (15:54 IST)
பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கு பஞ்சாப் லூதியானா மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இவர் கம்பீரம், முத்திரை உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.


 
 
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த வருடம் பேசிய நடிகை ராக்கி சாவந்த் வால்மீகி குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறியிருந்தார். அவரது அந்த கருத்துக்கள் வால்மீகி சமூகத்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளதாக கூறி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்தர் அதியா என்ற வழக்கறிஞர் லூதியானா மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இதனையடுத்து நடிகை ராக்கி சாவந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என லூதியானா நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் மார்ச் மாதம் விசாரணைக்கு வந்த போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.
 
இந்த சம்மனை கொண்டு மும்பையில் அவர் வசிக்கும் பகுதிக்கு சென்றது போலீசார். ஆனால் அந்த முகவரியில் அவர் இல்லை. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
 
ராக்கி சாவந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வால்மீகி பற்றி ராக்கி சாவந்த் தவறாக எதுவும் பேசவில்லை. இருந்தாலும் இதுகுறித்து அவர் நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுவிட்டார் என்றார். ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி நடிகை ராக்கி சாவந்த் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்