காதல், காமம், ஏமாற்றம் "பிட்ட கதலு" ட்ரைலர்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (16:46 IST)
"பிட்ட கதலு"  ட்ரைலர் ரிலீஸ்...!
 
பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சைக்குள்ளான லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடர் போன்று தெலுங்கு மொழியில் பிட்ட கதலு என்ற ஆந்தாலஜி வெப் தொடர் தற்போது உருவாகி வருகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் இயக்கி உள்ள இந்த தொடரில் அமலா பால், ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, ஈஷா ரெப்பா மற்றும் லக்‌ஷ்மி மஞ்சு ஆகியோர் நடித்துள்ளனர். 
 
காதல், ஏமாற்றம், துரோகம், காமம் என அனைத்து எமோஷனலும் கலந்து உருவாக்கியுள்ளார். இந்த வெப் தொடரின் ட்ரைலர் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. பாலிவுட்டை போன்று டோலிவுட்டில் இந்த தொடர் ஹிட் அடிக்க ப்ரொமோட் செய்து வருகின்றனர். இதோ அந்த ட்ரைலர் வீடியோ...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்