பத்மாவத் திரைப்படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு

Webdunia
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (14:53 IST)
பல தடைகளை கடந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான பத்மாவதி திரைப்படம், பத்மாவத் என்ற பெயரோடு கடந்த 24 ந் தேதி வெளியானது. 
பத்மாவத் ராஜ்புத் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி பத்மாவத் திரைப்படத்தை வெளியிட கூடாது என்றும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள், கார்னி சேனா அமைப்பினர் மற்றும் இந்து அமைப்பினர் பலரும் கோரிக்கை விடுத்தனர்.  குஜராத், அரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இதனால் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. 
 
கடந்த 24ந் தேதி படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் நேற்று மாலை சந்திரா டாக்கீஸ் என்ற திரையரங்கு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டுகளை தியேட்டரை நோக்கி வீசியுள்ளனர். இதனால் பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்