அடுத்த விவாகரத்துக்கு தயாரான ஜோடி

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (14:48 IST)
பிரபல கவர்ச்சி நடிகை மலைக்கா அரோரா தனது 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள திட்டுமிட்டுள்ளார். அதன்படி மலைக்கா அரோரா மற்றும் அவரது கணவர் அர்பாஸ் கான் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.


 

 
மலைக்கா அரோரா உயிரே படத்தில் தையா தையா என்ற பாடல் மூலம் தமிழில் எல்லோராலும் அறியப்பட்டவர். இவரது கணவர் அர்பாஸ் கான் பிரபல பாலிவுட் நடிகர். இவருக்கும் திருமணம் ஆகி 18 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது இவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
 
கடந்த செவ்வாய்கிழமை மதியம் இருவரும் நீதிமன்றத்துக்கு நேரில் சென்று நீதிபதியை சந்தித்தனர். நீதிபதி இருவரையும் பிரியும் முன் ஒருமுறை மீண்டும் யோசிக்க சொன்னதுடன் காரணமும் கேட்டார். இருவரும் மிக தெளிவான முறையில் காரணம் கூறியுள்ளனர். 
 
அதன்படி அடுத்த வருடம் மே 11ஆம் தேதி இருவருக்கும் சட்டபடி விவாகரத்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 47வயது வயதான மலைக்கா அரோரா இன்றுவரை கவர்ச்சியாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்