இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் தன்ஷிகா

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (14:24 IST)
கபாலியில் ரஜினியின் மகளாக நடித்த தன்ஷிகா, ராணி என்ற படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருகிறார்.

 
ராணி என்ற மலேஷியவாழ் பெண்ணின் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை. இதில் ராணியாக டைட்டில் கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடித்துள்ளார். கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்ததால் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க ஒப்புக் கொண்டதாக தன்ஷிகா தெரிவித்துள்ளார்.
 
சமுத்திரகனியின் அப்பா படம் மாதிரி ராணியும் பெயர் வாங்கும் என்பது தன்ஷிகாவின் நம்பிக்கை.
அடுத்த கட்டுரையில்