சுத்த வேஸ்ட்... தமிழில் படத்தில் நடிக்க ஏகப்பட்ட கண்டிஷன் போடும் ஜான்வி கபூர்!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (13:06 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். 
 
பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், தற்போது தமிழ் படங்களிலும் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், ஏகப்பட்ட கண்டீஷன் போடுகிறாராம். தமிழில் நடிக்க இயக்குனர்கள் கதை சொல்ல போனால் முதலில் ஹீரோ யார், தயாரிப்பாளர் யார் , எனக்கு அவ்வளவு சம்பளம் வேண்டும். 
 
ஷூட்டிங்கில் என் பாதுகாப்பிற்கு இதெல்லாம் செய்யணும் என கண்டீஷன் லிஸ்ட் அடுக்கிக்கொண்டே போகிறாராம். அதன் பிறகு தான் கதையே கேட்கிறாராம். என்னதான் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் இவ்வளவு ஆணவம் இருக்க கூடாது. சமீபத்தில் பையா 2 படத்தில் நடிக்க லிங்குசாமி ஜான்வியை அணுகிய நிலையில், அதை நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்