விஜய் தேவர்கொண்டாவின் டியர் காம்ரேட் பட முதல் பாடல் வெளியானது!

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (13:17 IST)
'அர்ஜுன் ரெட்டி, நோட்டா, கீதா கோவிந்தம்' புகழ் விஜய் தேவரகொண்டா, அடுத்து நடிக்கும் படம் 'டியர் காம்ரேட்'. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா நடிக்கிறார். 
 
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும்  இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக டீசரில் இடம்பெற்ற பாடல்,  படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்தது. 
 
இந்நிலையில் அந்த பாடலை எப்போது வெளியிடுவார்கள் என்று மிகுந்த ஆவலோடு காத்திருந்த ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக "ஆகாச வீடு கட்டும்" என்ற டியர் காம்ரேட் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான உடனேயே இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது .
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்