கைதியான போலீஸ் - கைதி இந்தி ரீமேக்கில் சிங்கம் ஸ்டார்!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (09:50 IST)
தமிழ் திரைப்படமான ‘கைதி’ திரைப்படத்தில் சிங்கம் ஸ்டார் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து தமிழில் வெளியான படம் ‘கைதி’. மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழகமெங்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இணையான வசூலை குவித்தது. கைதி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவான நிலையில் அதில் ஹீரோவாக யார் நடிப்பார்கள் என்ற யூகங்கள் பரவலாக இருந்தது.

இந்நிலையில் நான்தான் கைதி படத்தில் நடிக்க போகிறேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அஜய் தேவ்கன். இவர் ஏற்கனவே சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தவர். ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான அந்த படம் ஹிட் அடிக்கவே சிங்கம் 2 என்று தனியாக ஒரு படத்தையும் எடுத்தார்கள். தற்போது அஜய் தேவ்கனின் தன்ஹாஜி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக வெளியான காப் யுனிவர்ஸில் வெளியாகவிருக்கும் சூர்யவன்ஷியிலும் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார்.

அதில் சிங்கம் என்ற போலீஸ் கதாப்பாத்திரத்தில் வரும் அஜய் தேவ்கன் அடுத்து கைதியாகவும் நடிக்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்