அதையடுத்து அமலா பாலுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்த விஷ்ணு விஷால் கடந்த சில நாட்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். மேலும் இருவரும் கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படங்களை சமூகலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இருவரும் விரைவில் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர் என்றெல்லாம் கிசு கிசுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிரபல வார இதழ் ஒன்றிற்கு தனக்கும் ஜுவாலா கட்டாவிற்கும் இடையேயான உறவு குறித்து பேசிய விஷ்ணு விஷால், " இது நல்ல ப்ரண்ட்ஷிப் எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. ஆனால், இந்த ரிலேஷன்ஷிப் எவ்வளவு தூரம் போகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என கூறி அவர் மீது உள்ள ஈர்ப்பை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஒரு வேலை இந்த காதல் உறுதி என்றால் இவர் இரண்டாம் திருமணம் செய்ய நிறைய வாய்ப்பு உள்ளது என யூகிக்கப்படுகிறது.