டிவிட்டரை தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்: ட்ரெண்டாகும் #SAVETNKATHIRAMANGALAM!!

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (20:58 IST)
தமிழகத்தில் கதிராமங்கலம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் SAVE TN KATHIRAMANGALAM என்ற டேக்கை பரப்ப தொடங்கினர்.


 
 
தற்போது இது ஒரு லட்சத்திற்கும் அதிகமான ட்வீட்களை பெற்று இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட இந்த டேக்கை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து மிகவும் வைரலானது. 
 
தற்போதைய நிலையில் சுமார் ஒருலட்சத்தி இரண்டாயிரம் பேர் SAVE TN KATHIRAMANGALAM என்ற டேக்கை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிந்து வருகின்றனர்.
விஜய் ரசிகர்களின் ட்வீட்களை சூர்யா ரசிகர்கள் சிலரும் சேர்ந்து மறுட்வீட் செய்து வருகின்றனர்.
 
நடிகர் விஜய் நடித்த கத்தி படத்தின் காட்சிகளை வைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக மீம்களை தயார் செய்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
 
அதேசமயம், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இதில் தொடர்புபடுத்தி ட்வீட்களை பதிந்து வருகின்றனர்.
 
சில சுவாரஸ்ய ட்வீட்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.




 
அடுத்த கட்டுரையில்