அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கான தடை நீங்குகிறது

சனி, 25 ஜூன் 2016 (18:17 IST)
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை பணியமர்த்துவதில் உள்ள தடையை அடுத்த மாதம் பென்டகன் நீக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.
 

 
இந்த விதிமுறை காலாவதி ஆகிவிட்டதாகவும், ராணுவத்திற்கு தீங்கு இழைப்பதாகவும் பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்டர் தெரிவித்துள்ளார்.
 
இந்த முடிவு, திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக போராடும் பிரசாரகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்கா ராணுவத்தின் செயலராக எரிக் ஃபேனிங் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பிறகு இந்த முடிவு வெளியாகியுள்ளது. அவரும் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்