டிரம்ப் - கிம் உச்சி மாநாடு: பிப்ரவரி இறுதிக்குள் 2வது சந்திப்பு

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (14:31 IST)
பிப்ரவரி இறுதிக்குள் நடைபெறும் 2வது உச்சி மாநாட்டில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
 
முன்னதாக, வட கொரிய அரசின் பிரதிநிதி கிம் ஜாங்-சோல் அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
 
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னிடம் இருந்து கொண்டு வந்த கடிதத்தை கிம் ஜாங்-சோல் டிரம்பிடம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
 
புதிய உச்சி மாநாடு நடைபெறும் இடம் அறிவிக்கப்படவில்லை. வியட்நாமில் இது நடைபெறலாம் என்று அனுமானங்கள் நிலவுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்