ரஷ்யப் படைகளிடம் கையிருப்பில் இருக்கும் கணைகள் விவரம் என்ன?

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (12:32 IST)
ரஷ்யப் படைகளிடம் 3 நாள்களுக்குத் தேவையான வெடி பொருள்கள், குண்டுகளே உள்ளன என யுக்ரேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படைகளிடம் 3 நாள்களுக்குத் தேவையான கணைகளே (வெடிகுண்டுகள், வெடிபொருள்கள் போன்றவை) இருப்பில் இருப்பதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக தனது தினசரி அறிக்கையில் தெரிவித்த யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யப் படைகளிடம் உள்ள கணைகள், உணவு இருப்பு மூன்று நாளைக்கு மேல் தாங்காது என்று குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற விஷயங்கள் பின்வருமாறு... 
 
1. குவிக்கப்பட்டு வரும் ரஷ்யப் படைகளின் தேவையை நிறைவு செய்ய அவர்களால் முடியவில்லை. மூன்று நாள்களுக்குத் தேவையான எரிபொருள்களே அவர்களிடம் உள்ளன. மீண்டும் அவற்றை அங்கே சப்ளை செய்யும் பணியை டேங்க் டிரக்குகளே மேற்கொள்கின்றன.
 
2. கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் 9 வான் இலக்குகளை யுக்ரேன் தாக்கியுள்ளது. இதில் ஒரு விமானம், 6 ஆளில்லா விமானம், 2 ஹெலிகாப்டர்கள் அடக்கம்.
 
3. மத்திய யுக்ரேனில் உள்ள ஒக்டிர்க்கா என்ற சிறு நகரில், 300 ரஷ்யப் படையினர் சண்டையை நடத்த மறுத்து, சண்டைப் பகுதியில் இருந்து வெளியேறினர்.
 
4. 13 தாக்குதல்கள்களை முறியடித்து யுக்ரேன் படையினர் தற்காத்துக்கொண்டன. 14 டாங்கிகளையும், 8 தரைப்படை வாகனங்களையும், இரண்டு பன்முகப் பயன்பாட்டு வண்டிகளையும், மூன்று எறிகணை அமைப்புகளையும், 4 பிற வாகனங்களையும் அவை அழித்தன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்