உக்ரைன் - ரஷ்யா போர்: ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு தடை

திங்கள், 21 மார்ச் 2022 (21:52 IST)
உக்ரைன் நாட்டின் மீது புதின் உத்தரவுப்படி ரஷிய ராணுவம் படையெடுத்துப் போரிட்டு  வருகிறது.

இந்நிலையில்,  உக்ரைனில் இருந்து சுமார்  நான்கில் ஒரு பங்கு மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐதா தெரிவித்துள்ளது.

உக்ரைன் –ரஷ்யா  போர் தொடர்பாக பேரலுக்கு 2 டாலர் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை உக்ரைனி  படையெடுத்துப் போராடி வரும் ரஷிய ராணுவத்தினர் சுமார் 14,700 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷியாவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நீதிமன்றம் தடை செய்துள்ளதாக டிஏஎஸ் எஸ் செய்தி நிறுவனம் கூறிள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்