ரஷ்யா கடலில் முற்றுகையிடுவதாக குற்றம்சாட்டும் யுக்ரேன்

வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (09:56 IST)
அடுத்த வாரம் ரஷ்யா கடற்படை பயிற்சியில் ஈடுபடத் தயாராகிவரும் நிலையில், அந்நாடு தாங்கள் கடலை அணுகத் தடையாக இருக்கும் வகையில் முற்றுகையிட்டுள்ளதாக குற்றம்சாட்டுகிறது அண்டை நாடான யுக்ரேன்.


யுக்ரேனுடனான தனது எல்லையில் ரஷ்யா பெரும் படைகளைக் குவித்து வருவதால் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு நடுவில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது யுக்ரேன்.

அசோவ் கடல் முழுவதையும், கருங்கடலில் பெருமளவையும் தாங்கள் அணுகமுடியாதபடி ரஷ்யப் படையினர் தடுத்துக் கொண்டு நிற்பதாக யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.

யுக்ரேன் மீது படையெடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறது ரஷ்யா. ஆனால், யுக்ரேன் எல்லையில் சுமார் லட்சம் படைகளை அது குவித்திருக்கிறது. அண்டை நாடும் நட்பு நாடுமான பெலாரசோடு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

பெலாரசுக்கு யுக்ரேனுடன் நீண்ட எல்லைப் பகுதி இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்