காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானதா?

செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (13:13 IST)

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கர்நாடக முதல்வர் பிரதமருக்கு கடிதம். ''சித்தராமையாவின் இந்த கருத்து சரியா?, மத்திய மாநில அரசுகள் இதில் தொடர்ந்து அரசியல் செய்கின்றனவா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெவித்த கருத்துக்கள் இங்கே.

''தூங்குகிறவர்களை எழுப்பலாம், தூங்குவது போல பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது'' என கூறியுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்.
 

''கர்நாடகாவுக்கு அனுப்பப்படும் மின்சாரத்தை தடை செய்வதற்கான நேரம் இது''என்கிறார் அரவிந்த்.


''சித்தராமையா கருத்து சரியானது. அரசியல் சாசனம் இந்தியர்களுக்கானது. தமிழர்களுக்கு அல்ல'' என கருதுகிறார் சுரேஷ்குமார்.

''முழுக்க முழுக்க அரசியல்தான். ஏன் அனைத்து நீர்நிலைகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கலாமே?'' என்பது சுமு முரா எனும் நேயரின் கருத்து.

''காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் அரசியல் செய்யகின்றன இதே நிலை நீடித்தால் இந்தியா பாகிஸ்தான் போல இரண்டு மாநிலங்களுக்கும் பகை உண்டாக்கும்'' என்கிறார் வெங்கட்.

''தமிழ்நாடு பாகிஸ்தான் அல்ல. ஆனால், கர்நாடகா அப்படித்தான் நடத்துகிறது. கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும்'' என்கிறார் அபிஷா.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்