கத்தாரை தாக்கிய இஸ்ரேல்! நான் காரணம் இல்லை நேதன்யாகுதான்..! நழுவிய ட்ரம்ப்!

Prasanth K

புதன், 10 செப்டம்பர் 2025 (11:50 IST)

கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு தான் காரணம் அல்ல என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

 

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த பல ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில் இந்த போரை நிறுத்த பல நாடுகளும் முயன்று வருகின்றன. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினருக்கு கத்தார் ஆதரவளிக்கும் நிலையில், ஹமாஸ் தலைவர்கள் சிலர் தோஹாவில் தங்கியிருந்தனர்.

 

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக கத்தாருக்குள் நுழைந்து தோஹாவில் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு கத்தார் அரசு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

 

அதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த டொனால்டு ட்ரம்ப் “இன்று காலை, கத்தார் தலைநகர் தோஹாவின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க இராணுவத்தால் டிரம்ப் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டது. இது பிரதமர் நெதன்யாகு எடுத்த முடிவு, நான் எடுத்த முடிவு அல்ல” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் இஸ்ரேலின் இந்த தாக்குதலை விமர்சித்த ட்ரம்ப், அமெரிக்காவின் நட்பு நாடான கத்தார் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் இஸ்ரேலையோ, அமெரிக்காவின் இலக்குகளையோ முன்னேற்றாது’ என்று கூறியுள்ளார். இஸ்ரேலை நேரடியாக கடுமையாக கண்டிக்கவும் முடியாமல், கத்தாரையும் விட்டுத்தர முடியாமல் சூசகமாக அவர் தெரிவித்துள்ள கண்டனமே இது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்