தேர்தல் முடிவுகள் 2019: பத்து முக்கிய தகவல்கள்

வியாழன், 23 மே 2019 (17:08 IST)
பதினேழாவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான 10 தகவல்களை இங்கே வழங்குகிறோம்.
1. காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய் சிங்கை பின்னுக்கு தள்ளி போபாலில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய பிரக்யா சிங் தாக்கூர் முன்னிலை. 56,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
 
2.பெகுசராய் தொகுதியின் கன்னையாஹ் குமார் 1,27,365 வாக்குகள் பின் தங்கி உள்ளார். இந்த தொகுதியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்  முன்னிலையில் உள்ளார்.
 
3. கர்நாடாகாவில் 23 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் 2,70,000 வாக்குகள் பின் தங்கி உள்ளார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ரிஸ்வான் அர்ஷத் முன்னிலையில் உள்ளார்.
 
4. பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
 
5. 12 மணி நிலவரப்படி அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி முன்னிலை. 4674 வாக்குகள் பின் தங்கி உள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்.
6. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35 இடங்களிலும், அதிமுக கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
 
7. கடந்த டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்த ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள  இடங்களில் 25 தொகுதிகளில் பாஜக கூட்டணி அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. டிசம்பரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த  இன்னொரு மாநிலமான மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில் பாஜக 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதே டிசம்பர்  மாதம் காங்கிரஸ் வென்று ஆட்சியைத் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள 11 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளில் பாஜகவும் இரண்டு  தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.
 
8. யூனியன் பிரதேசமான அந்தமானில் பா.ஜ.கவும், லட்சத் தீவுகளில் காங்கிரஸும் முன்னிலையில் உள்ளன. டாமன் டையூ மற்றும் டாட்ரா நாகர் ஹவேலியில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளன.
 
9. கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்ளீம் லீக் 2 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ், புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.
 
10. குஜராத்தில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.கவே முன்னிலையில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்