இது மோடி அலை அல்ல இந்துத்துவா அலை: சுப்பிரமணியன் சுவாமி

வியாழன், 23 மே 2019 (16:47 IST)
லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றதற்கான காரணம் குறித்து ராஜ்யசபா எம்பியான சுப்ரமணியம் சுவாமி கருத்து  தெரிவித்துள்ளார். 
லோக்சபா தேர்தலிலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பாஜக 301 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணி கட்சிகள் 39க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளன.
 
இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் முடிவு  குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி ஒன்றில் கூறும்போது, "இது மோடி அலை அல்ல. இந்துத்துவா அலை" என்று  கூறியுள்ளார்.

மோடி அரசின் மோசமான பொருளாதார வளர்ச்சியை இந்தியர்கள் மன்னித்துள்ளனர். அதற்கு பதிலாக 5 ஆண்டுகள் ஊழலற்ற ஆட்சிக்காக வாக்களித்துள்ளனர். மேலும் இனி பொருளாதார சூழல் மந்தமானால் பெரிய பிரச்சனை ஏற்படும் என சுப்ரமணிய சுவாமி  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்