நாளை கூடுகிறது அமைச்சரவை கூட்டம் - அடுத்த திட்டம் என்ன?
வியாழன், 23 மே 2019 (16:53 IST)
17வது மக்களவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் முன்னணியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான செயல்பாடுகளில் இறங்க தொடங்கிவிட்டது.
நாளை மாலை டெல்லியில் அமைச்சரவை கூட்டத்தை மோடி நடத்துகிறார். இதில் ஆட்சியமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என தெரிகிறது.
இரண்டாவது முறையாக மீண்டும் மோடியே பிரதமராக பதவி ஏற்பாரா? அல்லது வேறு யாரேனும் பிரதமராக கூடுமா என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.