வாக்காளர் அட்டை இல்லையா? ஓட்டு போட வேறு என்ன ஆவணம் தேவை?

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (09:44 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டை இல்லாத பட்சத்தில் 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் விவரத்தை பார்க்கலாம்.
 
பரிந்துரை செய்யப்பட்ட ஆவணங்கள்:
 
1.ஆதார் ஆட்டை
 
2.பான் கார்ட்
 
3.ஓட்டுநர் உரிமம்
 
4.பாஸ்போர்ட்
 
5.புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம்
 
6.வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்
 
7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை
 
8.அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்
 
9.தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்ட்
 
10.மக்கள் தொகை பதிவேடால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்ட் (Smart card issued by RGI under NPR)
 
11.எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டைகள்
 
வாக்களிக்க செல்லும் முன்…
இந்த தேர்தலை பொறுத்த வரை பல்வேறு வசதிகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 
மாற்றுத் திறனாளிகள் தங்கள் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான வசதிகளை பெற்று கொள்ளலாம்.
 
தேர்தல் ஆணையத்தின் PWD என்ற செயலியை செல்பேசியில் நிறுவி, இதன்மூலம் வாக்குச்சாவடி அதிகாரியை அறிந்து கொண்டு சக்கர நாற்காலிக்கு விண்ணப்பிக்கலாம்.
 
வாக்களிக்கச் செல்லும் முன் நீங்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்திற்குள் சென்று உங்கள் தொகுதியில் யார், யார் போட்டியிடுகிறார்கள் என்பதை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாக்களிக்க செல்லும் முன் இந்தத் தகவல் உங்களுக்கு பயனளிக்கலாம்.
 
அது மட்டுமல்லாமல் உங்களின் வாக்காளர் அட்டையில் உள்ள தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் elections.tn.gov.in என்ற வலைத்தளத்திற்குள் சென்று தெரிந்து கொள்ளலாம்.
 
இந்த வலைதளத்தில் உங்கள் வாக்குச்சாவடி எங்குள்ளது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்கு முன்பு நீங்கள் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், நீங்கள் முகக் கவசம் எடுத்து செல்ல வேண்டும். வாக்களிக்க செல்லும் இடத்தில் நீங்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்