கொரோனா வைரஸ்: இலங்கையில் முடக்க நிலை அறிவிப்பு!!

வெள்ளி, 20 மார்ச் 2020 (13:58 IST)
இலங்கையை எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
இதன்படி, இலங்கை முழுவதும் அமுலாகும் வகையில் இன்று மாலை (மார்ச் 20) 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 23) அதிகாலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
 
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையிலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 65 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து நோயாளர்களும் அங்கொடை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்