கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் சீனாவில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலக நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. உலக சுகாதார அமைப்பு மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சீனர்களுக்கு இந்தியாவில் விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனர்களுக்கு உணவிடம், விடுதிகளில் அனுமதியில்லை என போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஹாங்காங் அரசு சீனாவுடனான எல்லையை மூடியுள்ளது. இதனால் சீனா தனித்து விடப்பட்ட நிலையில் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.