கொரோனா வைரஸ்: ஸ்பெயின் ஓய்வூதிய வீடுகளில் கைவிடப்பட்ட நிலையில் பிணமாக கிடக்கும் கொரோனா நோயாளிகள்

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (10:39 IST)
கொரோனா தொற்று நெருக்கடியில் பணி புரியும் ஸ்பெயின் நாட்டு ராணுவத்தினர், முதியவர்கள் சிலர் பணிக்கு பிறகான ஓய்வு இல்லங்களில் தனித்துவிடப்பட்டந்திருந்ததை கண்டதாகவும், சிலர் மெத்தைகளில் இறந்த நிலையில் கிடந்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் உள்ள ஓய்வு இல்லம் ஒன்றில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய ராணுவம் கொண்டு வரப்பட்டது. விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஐஸ் மைதானத்தை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்காக தற்காலிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தாலிக்கு பிறகு ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 514ஆக உயர்ந்துள்ளதாக ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்