சீனாவின் ஷி நகரில் கொரோனா கட்டுப்பாடு

வியாழன், 23 டிசம்பர் 2021 (09:41 IST)
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சீனாவின் ஷியான் நகரில் மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி அரசு ஆணையிட்டுள்ளது.

அந்நகரில் 1.3 கோடி பேர் வசிக்கின்றனர். சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள அந்நகரில் இதுவரை 143 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
புதிய கட்டுப்பாடுகளின்படி வீட்டிற்கு ஒருவர், இருநாட்களுக்கு ஒருமுறை தேவையான பொருட்களை வாங்க வெளியில் வரலாம்.
 
சீனா அடுத்த வருடம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவிருப்பதால் கொரோனா குறித்த அதிக விழிப்புடன் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்