இலங்கையில் ஆளும் கட்சி தலைவர்களின் வீடுகளை இலக்கு வைக்கும் அரசு எதிர்ப்பாளர்கள்

Webdunia
திங்கள், 9 மே 2022 (23:26 IST)
இலங்கையில் தற்போது வன்முறைகள் வலுப்பெற்றுள்ள நிலையில், ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் வீடுகளின் மற்றும் அலுவலகங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.
 
பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு அண்மித்த பகுதியில் தற்போது தீ பரவியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அலரி மாளிகைக்கு அருகிலுள்ள நுழைவாயிலில் இந்த தீ பரவியுள்ளது.
 
குறித்த பகுதியில் தொடர்ந்தும் அமைதியின்மை நிலவி வருகின்றது. இதேவேளை, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
 
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, மொறட்டுவை நகர சபை தவிசாளர் சமல்லால் பெர்ணான்டோவின் வீட்டிற்கு, ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
 
ஆர்ப்பாட்டக்காரர்கள், வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, பின்னர் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு பிரிவினர் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
 
இதேவேளை, அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் வீட்டின் மீதும் மக்கள் தீ வைத்துள்ளனர். அத்துடன், குருநாகல் நகர சபை தவிசாளர் துஷார சஞ்ஜீவவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்