செப்டம்பர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (21:15 IST)
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

 
கிரக நிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்  - லாப ஸ்தானத்தில்  சூர்யன்   - அயன சயன போக  ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  
 
கிரகமாற்றங்கள்:
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும், கேது பகவான் தன ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 
17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.    
28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
பலன்:
உறவினர் வருகையை விரும்பும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும்.   
 
தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.
 
குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவ பூர்வமான அறிவு திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள்
 
கலைத்துறையினருக்கு  உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும்
 
அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதற்கான பலனும் பெறுவீர்கள். நேரத்தை வீணாக்காமல் உபயோகப் படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்
 
பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது
 
சித்திரை3, 4 பாதங்கள்:
இந்த மாதம் அசையா சொத்துகளாலும், வண்டி, வாகனங்களாலும் வீண்செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். 
 
ஸ்வாதி:
இந்த மாதம் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம்.  உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும். 
 
விசாகம் 1, 2 ,3 பாதங்கள்:
இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு தொழிலைப் பெருக்கமுடியும் என்றாலும் வேலைக்குத் தக்கசமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசுவழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். 
 
பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழி பட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கி யம் உண்டாகும். பணவரத்து கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: பிரவுன், வெள்ளை
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்