செப்டம்பர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (21:02 IST)
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

 
கிரக நிலை:
குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில்  சூர்யன் - பஞ்சம  ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் -  விரைய ஸ்தானத்தில் செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றங்கள்:
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் ராசிக்கும், கேது பகவான் களத்திர ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 
17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
 
பலன்:
புதிய ஆர்டர்களைப் பெறப் போகும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
 
தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே  செய்த திறமையான பணிகளுக்கு  உரிய நற்பலனை பெறுவார்கள்.
 
குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.
 
கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது. சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.
 
அரசியல்வாதிகளுக்கு சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது.
 
பெண்கள் அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.
 
மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
 
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்னே அனுகூலப்பலனை அடையமுடியும்.  
 
ரோகிணி:
இந்த மாதம் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் வீண்விரயங்கள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். 
 
மிருகசீர்ஷம்:
இந்த மாதம் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் சில நேரங்களில் உங்களுக்கே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். 
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஆரஞ்சு, மஞ்சள்
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்