செப்டம்பர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (21:04 IST)
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

 
கிரக நிலை:
ராசியில்  ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றங்கள்:
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கும், கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 
17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
 
பலன்:
கவலைகளை பொடிப்பொடியாக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம்  சிற்சில பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள்.  மற்றவர்களின் செயல்களால் மனஅமைதி கெடவும்  வாய்ப்பு உண்டு.  பணவரவு ஏற்படும். நீண்ட நாட் களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.
 
தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக  செய்து முடிப்பார்கள்.  அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம்.
 
குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்
கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.
 
அரசியல் துறையினருக்கு சாதகமான  செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்தின் பார்வை  அதிகரிக்கும்  அமையும்.
 
பெண்கள் எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.
 
மாணவர்கள் சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது.  பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.
 
மிருகசீர்ஷம் 3,4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். 
 
திருவாதிரை:
இந்த மாதம் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளு குறையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். 
 
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிடமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமானநிலை இருக்கும் என்றாலும் முடிந்தவரை பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது. 
 
பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சனைகள் தீரும். பண கஷ்டம் தீரும்..
அதிர்ஷ்ட கிழமைகள்: பச்சை, வெள்ளை
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்