மார்ச் மாத பலன்கள் - மிதுனம்

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (16:08 IST)
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
 

இந்த மாதம் அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. காரிய அனுகூலங்களை தரும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மிருகசீர்ஷம்:
இந்த மாதம் பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம்  நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். வெளிநாடு தொடர்பான பிரச்சனைகள்  நீங்கும். திறமை வெளிப்படும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

புனர்பூசம்:
இந்த மாதம்  நெருக்கமானவர்களுடன் ஏற்படும் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும். எதைப்பற்றியாவது யோசித்துக்கொண்டே இருப்பீர்கள்.  பண தேவை உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்