பெண்களுக்கு சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள். ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.