பிப்ரவரி 2022 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (09:15 IST)
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

 
கிரகநிலை:
ராசியில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் செவ், புதன்,  சுக் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சூர், சந், சனி - தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றங்கள்:
09-02-2022 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-02-2022 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
சொன்ன சொல்லை காப்பாற்றும் குணமுடைய ரிஷப ராசியினரே  இந்த மாதம் தைரியமாக எதையும் செய்ய தோன்றும். உங்களது செயல்களால் உங்களுக்கு  மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.
 
எதை பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த  பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.
 
கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை  துணையின்  மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.
 
பெண்களுக்கு எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
 
கலைத்துறையினருக்கு எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தன்னம்பிக்கை ஏற்படும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். 
 
அரசியல்துறையினருக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  
 
மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.
 
கார்த்திகை-2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் மற்றவர்களுடன்  வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.
 
ரோகினி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.
 
மிருகசீரிஷம் - 1, 2  பாதங்கள்:
இந்த மாதம்  குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக் காக பாடுபட வேண்டியும் இருக்கும்.
பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்