பிப்ரவரி 2022 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (09:13 IST)
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

 
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ், புதன்,  சுக் (வ) - தொழில் ஸ்தானத்தில் சூர், சந், சனி - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றங்கள்:
09-02-2022 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-02-2022 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
புத்தி சாதுரியத்தால்  புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே, இந்த மாதம் எண்ணிய காரியங்களை  திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு  இருக்கும். எதிர்பார்த்த  இடமாற்றம் கிடைக்கும். பயணம்  செல்ல வேண்டி இருக்கும்.  சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.
 
தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம்  வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.  வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
 
குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
 
பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
 
கலைத்துறையினருக்கு காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். 
 
அரசியல்துறையினருக்கு மனகவலை குறையும். எல்லா வகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும். 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.
 
அஸ்வினி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்
 
பரணி:
இந்த மாதம் குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக் கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்
 
கார்த்திகை - 1 ம் பாதம்:
இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.
 
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15, 16

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்