இந்த ராசிக்காரர்கள் வியாபார முயற்சிகள் பலன் தரும்! - இன்றைய ராசி பலன் (09.01.2025)!

Prasanth Karthick
வியாழன், 9 ஜனவரி 2025 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்
இன்று தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

ரிஷபம்
இன்று சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திரவழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களின் பெயர், புகழ், உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

மிதுனம்
இன்று உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திருப்தியான நிலையை அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்
இன்று உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

சிம்மம்
இன்று பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக அமையும். கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். கடன்கள் குறையும். கலைஞர்கள் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கன்னி
இன்று பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும் என்றாலும்  தேவையற்ற வீண் விரயங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் உணவு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

துலாம்
இன்று கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமையற்ற நிலை உண்டாகும். முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும்.  தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

விருச்சிகம்
இன்று பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றலும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மகரம்
இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண்பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் அமையும். கலைஞர்கள் எதிர்பார்த்த கதாபாதிரங்களுக்கான வாய்ப்பினைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

கும்பம்
இன்று பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும். அரசியல்வாதிகள் மேடை பேச்சுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது உத்தமம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

மீனம்
இன்று மாணவர்கள் அதிக அக்கறையோடு படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று வாழ்வில் உயர்வினை அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்