கல்யாண வரம் வேண்டுமா? கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்..!

Mahendran
புதன், 8 ஜனவரி 2025 (18:38 IST)
நீண்ட வருடங்களாக கல்யாணம் நடக்காமல் தடைபட்டுக் கொண்டிருக்கும் ஆண் அல்லது பெண், கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு.உடையூர் என்ற கிராமத்தில் இருக்கும் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்றால், கல்யாணம் உடனே நடக்கும் என்று நம்பப்படுகிறது. 
 
மிகவும் பழமை வாய்ந்த வைணவ கோவிலான  இந்த கோயில் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. பல நூறு வருடங்களாக சிதலமடைந்து கிடந்த இந்த கோயிலில், ராமானுஜர் சில காலம் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தான் இந்த ஆலயத்தை, "ஏன் இப்படி கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்கள்?" என்று கூறியதை அடுத்து இந்த கோயில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு. 
 
 இந்த கோயிலில் நுழைந்ததும், மணிமண்டபம், மகா மண்டபம், அர்த்த ஜாம வாசலில் ஜெயம், விஜயன் ஆகிய துவார பாலகர்கள் கம்பீரமாக இருப்பார்கள். கல்யாண வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் இருக்கும் கோலத்தை தரிசனம் செய்தால், தடைபட்டுப் போன கல்யாணம் உடனே நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது. 
 
இந்த கோயில், கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் சிதம்பரத்திலிருந்து பு.உடையூர் கிராமத்திற்கு செல்ல பேருந்து வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்