பாஜகவில் சேருகிறாரா ஓபிஎஸ்?

Webdunia
சனி, 29 ஜூலை 2017 (06:20 IST)
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது அவரை ஆதரிக்கும் ஒருசில எம்.எல்.ஏக்களை கூட அவரால் பாதுகாக்க முடியவில்லை. ஆறுக்குட்டியை அடுத்த மாபா.பாண்டியராஜன் உள்பட ஒருசிலரும் அணிமாற தயாராக இருப்பதால் ஓபிஎஸ் நிலை பரிதாபமாக இருப்பதாக கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த ஓபிஎஸ், தான் பாஜகவில் இணைவது குறித்து பாஜக தலைவர்களுடன் பேசினாராம். ஆனால் ஓபிஎஸ் பாஜகவுக்கு வருவதை தமிழக பாஜகவினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர் பாஜகவுக்கு வந்தால் தங்களுடைய முக்கியத்துவம் குறையும் என்று நினைக்கின்றார்கள் போலும்
 
இந்த நிலையில் பிரதமரின் சந்திப்பின்போது ஓபிஎஸ், அணிகளை இணைக்க வேண்டும் என்று மட்டும் அறிவுறுத்தப்பட்டதாம். பாஜகவில் அவரை இணைப்பது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்க முடிவும் கூறமுடியாது என்று அவருக்கு விளக்கப்பட்டதாம்
அடுத்த கட்டுரையில்