ஓபிஎஸ், ஈபிஎஸ்-களை ஆட்டுவிக்கும் பாஜக மேலிடம்? ஒரு அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (04:19 IST)
தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு அரசியல் சம்பவத்திற்கும் சூத்திரதாரி பாஜக மேலிடம்தான் என்று பலருக்கு தெரியவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். பாஜகவின் முதல் அசைன்மெண்ட் அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை வெளியேற்றுவது. சசிகலா சிறை, தினகரன் வழக்குகள் என வெற்றிகரமாக அந்த அசைன்மெண்ட் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.



 


அடுத்து அதிமுகவை இரண்டாக பிரிந்த நிலையிலேயே வைத்திருப்பது என்ற புது அசைன்மெண்ட்டை கொடுத்துள்ளார்களாம். இதுவரை ஓபிஎஸ்-க்கு மறைமுக ஆதரவு கொடுத்து வந்த பாஜக மேலிடம், தற்போது இரு அணிகளும் இணையும் சூழ்நிலை வந்தவுடன் ஈபிஎஸ்-க்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துவிட்டதாம். அதன் காரணமாகத்தான் தமிழகத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியது. ஈபிஎஸ்-ம் மத்திய அரசுக்கு பரிபூரண ஒத்துழைப்பு தயார் என்பதை நிரூபிக்க மத்திய அரசு  சிவப்பு விளக்குகளை காரில் பயன்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டதும், முதல் ஆளாக தனது காரில் இருந்த சைரனை தானே கழற்றி தனது விசுவாசத்தை காட்டியுள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டால் அதிமுக பலமாகிவிடும். பின்னர் தங்களுடைய பேச்சை கேட்க மாட்டார்கள் என்றுதான் தேர்தல் வரை இருவரையும் இணைக்காமலே வைத்திருந்து தேர்தலின்போது ஏதாவது ஒரு அணிக்கு ஆதரவு கொடுத்து இன்னொரு அணியை ஒழித்துகட்டுவதுதான் இப்போதைக்கு பாஜகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடுத்த அசைன்மெண்ட் என்று கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்