ரஜினியும் இல்ல, கமலும் இல்ல: அரசியலில் முழு வீச்சில் களமிறங்கும் விஜய்காந்த்!!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (10:48 IST)
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. கட்சியையும் ஆட்சியையும் கைப்படுத்த பல போட்டிகள் நடைபெற்று வருகிறது.


 
 
அதேபோல், கருணாநிதி முன்பை போல் அரசியலில் ஈடுபடாத காரணத்தால் எதிர்கட்சியும் தமிழக அரசியலுக்கு சரியாக ஈடுகொடுக்கவில்லை என பரவலாக பேச்சு எழுந்து வருகிறது.
 
தமிழகத்தில் நிலவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் தங்களது அரசியல் ஆர்வத்தை வெளிபடுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜய்காந்த் மீண்டும் முழு வீச்சில் அரசியலில் இறங்கவுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
 
கடந்த 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தேமுதிக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. துவக்கம் முதல் நல்ல நிலையில் இருந்துவந்தது, பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வைத்து மேலும் முன்னேறியது. 
 
ஆனால், 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின் சரிவை சந்திக்க துவங்கியது. இதற்கு முக்கிய காரணம்   விஜய்காந்தின் தெளிவற்ற பேச்சு என கருதப்படுகிறது.
 
எனவே, மீண்டும் விட்ட இடத்தை பிடிக்கவும் தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிறப்பவும் கட்சி பொறுப்பாளர்களில் சில மாற்றங்களை கொண்டு வரப்போவதாக தெரிகிறது.
 
அதோடு மக்கள் செல்வாக்கை பெற அரசியல் மேடைகளில் இனி விஜய்காந்த பழைய கேப்டன் விஜய்காந்தாக மாற பல பயிற்சிகளை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்