வருமான வரித்துறை சோதனை ; கோ பூஜை நடத்திய தினகரன்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (11:17 IST)
தனது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக்கொண்டிருந்த போது தினகரன் கோ பூஜை நடத்தினார்.


 

 
போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, நடராஜன் வீடு மற்றும் 150க்கும் மேற்பட்ட சசிகலா உறவினர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெங்களூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், சென்னை அடையாறு பகுதியில் உள்ள தினகரன் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது, தினகரன் கோ பூஜை செய்துள்ளார். முதலில் பூஜை நடத்துவதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதைத்தொடர்ந்து, அவர்களிடம் தினகரனின் மனைவி அனுராதா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின், பூஜை நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தனர். 


 

 
அதன் வீட்டில் உள்ள பசுவிற்கு அவர்கள் பூஜை செய்தனர். எந்த பரபரப்பும் இன்றி தினகரன் மிகவும் இயல்பாக அந்த பூஜையில் கலந்து கொண்டார். அவரும், அவரின் மனைவி அனுராதாவும் பசுவிற்கு பழம் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்