187 இடங்களில் சோதனை - வருமான வரித்துறையினர் அதிரடி

வியாழன், 9 நவம்பர் 2017 (09:26 IST)
ஜெயா தொலைக்காட்சி, தினகரன் வீடு, இளவரசியின் மகன் விவேக் வீடு, நடராஜன் வீடு உள்ளிட்ட மொத்தம் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் தற்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


 

 
இன்று காலை முதல் ஜெயா டிவி மட்டுமின்றி அதனை சார்ந்த நிறுவனங்கள், சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
 
கொடநாடு பங்களா, சென்னை அடையாற்றில் உள்ள தினகரனின் வீடு, மன்னார்குடியில் உள்ள தினகரனின் வீடு, தஞ்சையில் உள்ள நடராஜன் வீடு, புதுக்கோட்டையில் அறந்தாங்கி தினகரன் அணியின் மாவட்ட செயலாளர் வீடு, சென்னை தி.நகரில் பரோலில் வெளிவந்த போது சசிகலா தங்கிய சென்னை தி.நகர் கிருஷ்ணப்பிரியா வீடு, சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு, போயஸ்கார்டன் வீட்டில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், சசிகலாவின் உறவினர்கள் வீடு என மொத்தம் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
ஆனால், அங்கு எதுவும் கைப்பற்றியதாக இதுவரை தகவல் எதுவும் வெளிவரவில்லை. ஒவ்வொரு இடத்திலும் 3 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி சோதனை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்