அப்பல்லோவில் ஜெ. : துணை முதல்வர் யார்? : விவாதிக்கும் அமைச்சர்கள்

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2016 (12:19 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அரசு பணிகளை கவனிக்க விரைவில் துணை முதல்வர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
கடந்த 16 நாட்களாக முதல்வர் மருத்துவமனையில் இருக்கிறார்.  தற்போது அவருக்கு எய்ம்ஸ் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது. 
 
இந்நிலையில், முதல்வர் இன்னும் சில நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வார் என நேற்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
முதல்வர் மருத்துவமனையில் இருப்பதால், தலைமை செயலகத்தில் அரசு பணிகள் சரியாக நடைபெறாமல் இருக்கிறது. முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனும் மருத்துவமனையில் இருக்கிறார். அமைச்சர்களும் மருத்துவமனையிலேயே நேரம் கழிக்கின்றனர். இதனால் துறை ரீதியான பணிகள் தேங்கிக் கிடக்கிறது. முதல்வரின் கையெழுத்து இல்லாமல் அனைத்து பணிகளும் முடங்கி போயுள்ளது.
 
எனவே, தற்காலிகமாக ஒரு துணை முதல் அமைச்சர் நியமிக்கப்பட்டால், அரசு அலுவல் தொடர்பான பணிகள் வேகமெடுக்கும் என அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர். எனவே விரைவில் துணை முதல்வர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதற்கு ஓ. பன்னிர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஓ.எஸ்.மணியன் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறுவதாகவும், அதுபற்றிய ஆலோசனையில் அவர்கள் இருப்பதாகவும் தெரிகிறது.
 
ஒரு புறம், முதல்வர் விரைவில் வீடு திரும்புவார், எனவே துணை முதல்வர் நியமனத்திற்கு வாய்ப்பிருக்காது என்றும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுவதாக தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்