ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் ஏன் எதிர்க்க வேண்டும்: திருமாவளவன்

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (05:27 IST)
தமிழக அரசியலில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருமே ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ அரசியலில் ஈடுபட்டால் நிச்சயம் திராவிட கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது



 
 
இந்த நிலையில் திராவிட கட்சிகளால் ஒதுக்கப்பட்ட சிறுசிறு கட்சிகள் ரஜினி, கமல் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதில் கூட்டணி சேர்ந்து தங்களை காப்பாற்றி கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'அரசியலுக்கு வரவேண்டும் என்றால் அவர்கள் அறப்பணிகள் செய்திருக்க வேண்டும், போராட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும், சிறைக்குச் சென்றிருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் கிடையாது. இவையெல்லாம் இல்லாமலேயே அரசியலுக்கு வரலாம். ஒருவர் அரசியலில் ஈடுபட கூடாது என்று சொல்வது ஜனநாயக மரபு அல்ல. அந்த வகையில்தான் நான் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை ஆதரித்தேன்' என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்