தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா மற்றும் வேட்பாளர் மரணம் ஆகிய காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. துவக்கம் முதலே அரவக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகபட்சமாக 81.92 சதவீதம் பதிவாகியுள்ளது. அதேபோல் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இறுதி நிலவரப்படி,
அரவக்குறிச்சி - 81.92
தஞ்சாவூர் -69.02
திருப்பரங்குன்றம் -70.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
அதேபோல், பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில், நெல்லித்தோப்பு பகுதியில் 85.76 சதவீதம் ஓட்டுப் பதிவு நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.