பெர்முடா முக்கோணம்: அவிழ்ந்த மர்ம முடிச்சில் புதிய திருப்பம்

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (17:29 IST)
அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும், பெர்முடா முக்கோணமானது புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்று நிலப்பரப்புகளை ஒரு முக்கோணம் போல இணைக்கும் கடல் பகுதியாகும். 


 
 
இந்த முக்கோணக் கடல்பகுதியில் எண்ணற்ற கப்பல்கள் மர்மமான முறையில் மறைந்து போயுள்ளன. ஆனால், இது குறித்த உண்மை நிலவரம் எவருக்கும் தெரியவில்லை.
 
இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற ஆராய்ச்சி பல காலமாகவே நடந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து ஆய்வு நடத்தி வந்த இங்கிலாந்து விஞ்ஞானிகள், இந்த பெர்முடா பகுதியில் அறுங்கோண மேகங்கள் காணப்படுவதாகவும் அதனால் அந்த பகுதியில் நீர் சுழற்சி ஏற்படுவதாகவும் கூறி உள்ளனர்.
 
எனவே, இந்த காற்று வெடிகுண்டுகளால்தான் அப்பகுதியில் கப்பல்கள், விமானங்கள் போன்றவை மர்மமான முறையில் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர் என கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது.
 
ஆனால் இச்செய்தியில் தற்போது புதிய திருப்பம் வந்துள்ளது. அது என்னவெனில், கடற்பகுதியின் அடித்தட்டில் பெரிய எரிமலை வாய்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த எரிமலைவாய்கள் அரை மைல்கள் பரந்து விரிந்து கிடப்பதாகவும், இதன் ஆழம் சுமார் 150 அடி இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
 
இதன் காரணமாகவே நார்வே கடற்பகுதியில் அதிக இயற்கை வாயு கிடைப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான எரிமலைவாய்கள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுவதால், இவைகள் அளவுக்கு அதிகமான வாயுவை வெளியேற்றுகின்றன. 
 
எரிமலைவாய் அடிக்கடி வெடித்துச்சிதறுவதால் அப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு அது சிக்கலை ஏற்படுத்துகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
ஆனால் உண்மையான மர்மம் என்னவென்பது புரியவில்லை...


 
அடுத்த கட்டுரையில்