திமுக-வின் அரசியலுக்கு மோடி எதற்கு? ஸ்டாலின் ரியாக்‌ஷன்!!

புதன், 8 நவம்பர் 2017 (20:25 IST)
பாஜக - திமுக கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியான செய்திகளுக்கும் மோடி கருணாநிதி சந்திப்பு அரசியல் ரீதியானது என்பதற்கும் பதில் அளித்துள்ளார் ஸ்டாலின்.  


 
 
சில தினங்களுக்கு முன்னர் கருணாநிதியை சந்தித்தார் மோடி. இது குறித்து பல சர்ச்சைகள் வெளியாகிகொண்டிருக்கின்றன. இது குறித்து ஸ்டாலின் பின்வருமாறு பேசியுள்ளார்.  
 
மோடி அரசியலுக்காக சென்னை வரவில்லை; நாங்களும் அவரை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது. 
 
மோடி ஸ்டாலினுடன் கை குலுக்கியதால் திமுக-வின் போராட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன. மேலும் பாஜக - திமுக கூட்டணி வைக்கும் என கற்பனை செய்திகளும் வெளியாகி உள்ளன. 
 
மழை காரணமாகவே போராட்டம் நிறுத்தப்பட்டது. திமுக தலைவரை மனிதாபிமான அடிப்படையில் நலம் விசாரிக்கதான் மோடி வந்திருந்தார். அவரை வரவேற்பதற்காக நானும் முன்கூட்டியே துபாயில் இருந்து சென்னை வந்தேன் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்