கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை: காதலன் கைது

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (16:26 IST)
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள சின்ன புனல்வாசல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (துப்புரவு தொழிலாளி) என்பவரின் மகள் சசிகலா (19) தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.


 


சில மாதங்களுக்கு முன்பு கெங்கவல்லியில் உள்ள தையல் பயிற்சி பள்ளியில் சசிகலா சேர்ந்தார். அப்போது அங்கு பயிற்சிக்கு வந்த பெண் மூலம், ஆத்தூர் சீலியம்பட்டியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஜெயப்பிரகாசின் (25) சசிகலாவுக்கு அறிமுகியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததுள்ளது. இதை அடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜெயப்பிரகாசிடம், சசிகலா கேட்டதற்கு ஜெயப்பிரகாஷ் மறுத்துள்ளார்.

பின்னர், ஜெயப்பிரகாஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ் ஊருக்கு வந்ததை அறிந்த சசிகலா, அவருடைய வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் ஜெயப்பிரகாசின் தந்தை நடேசன், தாயார் லதா ஆகியோர் சசிகலாவை திட்டி அனுப்பியுள்ளனர்.  இதனால் மனம் உடைந்த சசிகலா மாலை வீட்டுக்கு வந்து விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

சசிகலாவின் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து அவருடைய உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். அப்போது, காவல்துறையினர், சசிகலாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை அடுத்து, சசிகலாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். தற்போது, ஜெப்பிரகாஷ், நடேசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
அடுத்த கட்டுரையில்