அதிமுகவை சுக்குநூறாக்க சசிகலா அதிரடி திட்டம்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (22:45 IST)
ஒருபக்கம் அதிமுகவின் இரு அணிகளையும் இணைத்து இரட்டை இலை சின்னத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று பெங்களூரில் இருந்தே சசிகலா திட்டமிட்டு கொண்டு வரும் நிலையில் ஜெயலலிதா இருந்த போதே அதிமுகவினர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருந்த சசிகலா புஷ்பா அதிமுகவை உண்டு இல்லைன்னு ஒருவழியாக்க முடிவு செய்துள்ளாராம்



 


அதிமுக தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன், தீபா என நான்கு அணிகளாக இருக்கும் நிலையில் இன்னும் ஒருசில அணீயாக்க சசிகலா புஷ்பா தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி கூவத்தூரில் நடந்த அநியாயங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் கொடுக்கவும் முடிவு செய்துள்ளாராம். எம்.எல்.ஏக்கள் சரவணன், கனகராஜ் ஆகியோருடன் சசிகலாவும் தினகரனும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, உள்துறை அமைச்சகத்திடம் மனுவாக அளிக்க உள்ளாராம் சசிகலா புஷ்பா. இந்த மனுவை மத்திய அரசு பரிசீலிக்கும் எனவும் உறுதியாக நம்புகிறார்
அடுத்த கட்டுரையில்