ஜெயலலிதாவின் உருவ படத்தை அகற்றாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் என கூறிய திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக சிந்தித்து, மக்களுக்காகவே வாழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அரசியல் நாகரீகம் இல்லாமல் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளதை ஓபிஎஸ் கண்டித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதாவை தமிழக மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது. இதை பற்றி விமர்சிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு பயனுள்ள வேலையை ஸ்டாலின் செய்ய வேண்டும் என பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.